புலோலியில் முதியவர் திடீர் இறப்பு, கொழும்பிலிருந்து திரும்பிய மகளால் கொரொனா சந்தேகம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, December 6, 2020

புலோலியில் முதியவர் திடீர் இறப்பு, கொழும்பிலிருந்து திரும்பிய மகளால் கொரொனா சந்தேகம்

 யாழ் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இன்று திடீரென உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி பகுதியில் வசித்து வந்த முதியவர் ஒருவருக்கு நேற்று இரவு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (டிச-06) ஞாயிற்றுக் கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவரின் மகள் மருத்துவக்கல்லூரி மாணவியெனவும் அண்மையில் கொழும்பில் இருந்து  வீட்டுக்கு  திரும்பியுள்ளார். அவருடன் தொடர்புபட்ட ஒருவருக்கு கொழும்பில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

உயிரிழந்தவரது மகள் கொழும்பு கொரோனாத் தொற்று பின்னணியில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள காரணத்தினாலேயே அவரது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகிறது.

மேற்குறித்த தகவல்கள் குறித்து கேட்டபோதே வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.