பிக்கு ஒருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்ப்டுகின்றது.
இச் சம்பவம் கஹவ மற்றும் அக்குறளவிற்கு இடைப்பட்ட பிரதேசத்தில் கடற்கரையையண்டிய ரயில் பாதையில் இடம்பெறுள்ளது.
நேற்று இரவு கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அதிவேக ரயிலில் மோதியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
எல்பிட்டிய கணேகொட புராதன ரஜமகா விகாரையைச் சேர்ந்த 30 வயதுடைய பிக்கு ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குறித்த பிக்குவின் உடல் பிரேதப் பாிசோதனைகளுக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.