யாழில் மேலும் 6 பேருக்கு கொரோனா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, December 22, 2020

யாழில் மேலும் 6 பேருக்கு கொரோனா

 யாழில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 412 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 3 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கிளிநொச்சி – பாரதிபுரத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் 2 பேருக்கும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.