இந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, December 27, 2020

இந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)

 சந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.


அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிடக் குறையும். சிலருக்கு பாராட்டுக்கள் குவியும். கலைஞர்களுக்கு விருதுகள் கிடைக்கக்கூடும். எதிர்பார்த்த தொகை வருவதற்கான அறிகுறி தோன்றும்.


பரணி: சொத்தை விற்கும் முயற்சி தடங்கலுக்கு பிறகே நகரும். காதலில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாரம் இது. பிறரை காயப்படுத்தும் விதத்தில் பேச வேண்டாம். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.


கார்த்திகை 1: புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். பெண்களுக்கு ஈகோ உணர்வு அதிகரிக்கும். பணியாளர்கள் பேச்சைக்குறைத்துக் கொள்வது நல்லது.


புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. லட்சுமி வழிபாடு சுபிட்சம் தரும்.


கார்த்திகை 2,3,4: வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். புதிய வாகனம், வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நிலுவைப் பணிகளை முடித்து நிம்மதி அடைவீர்கள்.


ரோகிணி: மத்தியஸ்தம் செய்வது அவசியமா என்று யோசித்து செயல்படுங்கள். நன்றி மறந்த சொந்தங்களை நினைத்து வருந்த வேண்டாம். நியாயம் உங்கள் பக்கம் உள்ளது. உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.


மிருகசீரிடம் 1,2: வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் யோகம் உங்களைத் தேடி வருகிறது. வியாபாரிகளுக்கு தைரியம் அதிகரிக்கும். பெண்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள்.


ராகு, கேது, புதன் நன்மைகளை வழங்குவர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

மிருகசீரிடம் 3,4: பணியாளர்கள் எடுக்கும் முயற்சி கைகூடும். மனதில் மகிழ்ச்சி தாண்டவமாடும். குடும்பத்தினரால் கூடுதல் நன்மை கிடைக்கும். அனுபவம் மிக்கவர்கள் உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருப்பர்.


திருவாதிரை: பார்க்க நினைத்த ஒருவரை பொது இடத்தில் தற்செயலாக சந்திப்பீர்கள். சகபணியாளர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கடந்த காலத்தில் உங்களைத் துாற்றியவர்கள் போற்றுவார்கள்.


புனர்பூசம் 1,2,3: இதுவரை வராமல் இருந்த பென்ஷன், பி.எப், கிராஜூவிட்டி வந்து சேரும். சகஊழியர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.


குரு, சுக்கிரன், சந்திரன் அனுகூல பலனை தருவர். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.

புனர்பூசம் 4: பணியிடத்தில் உள்ள சட்டதிட்டங்களுக்கு வளைந்து கொடுப்பது நல்லது. உறவினர்களால் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.


பூசம்: தொழிலில் லாபம் ஓரளவே வரும். பங்கு சந்தை முதலீடுகளில் அதிக கவனம் தேவை. உறவினரிடம் இருந்து இனிக்கும் செய்தி வந்து சேரும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.


ஆயில்யம்: அரசு பணியாளர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். சிறு சிறு செலவுகள் ஏற்படும். உடல் உபாதை ஒன்று வந்து நீங்கும். நீங்கள் மதிக்கும் நபர் ஒருவர் தேடி வருவார். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.


செவ்வாய், புதன், சூரியன் அதிர்ஷ்டமான பலன்களை தருவர். சூரியன் வழிபாடு வளம் தரும்.

மகம்: மனதை நிறைக்கும் செய்தி வந்து சேரும். சிலருக்கு விருது கிடைப்பதற்கான தகவல் வரும். பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.


பூரம்: இதுநாள் வரை பட்ட துயரங்களுக்கு தீர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளின் நட்பை பெறுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள்.


உத்திரம் 1: நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் நன்மை கிடைக்கும். திருப்தியற்ற சூழ்நிலையால் அவசரப்பட்டு வேலையை விட்டுவிடாதீர்கள். முன்பு இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வாரக் கடையில் கிடைக்கும்.


குரு, சந்திரன், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.


உத்திரம் 2,3,4: பிள்ளைகளின் முன்னேற்றத்தால் சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பணியிடத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.


அஸ்தம்: காதலிப்பவர்கள் நிதானமுடன் செயல்படுவது நல்லது. பழைய கடனை அடைக்க புதிதாக கடன் வாங்க வேண்டி வரும். மனதில் இருந்து வந்த பயங்கள் நீங்கும். வாகனம் ஓட்டும்போதுஎச்சரிக்கை தேவை.


சித்திரை 1,2: அரசாங்க விஷயங்களில் நிதானமாக செயல்படுங்கள். பத்திரங்கள், நகைகளை கவனமாக கையாள வேண்டும். விவாதங்களை தவிர்த்தால் மன உளைச்சலை தடுக்கலாம். தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.


குரு, புதன், சந்திரன் கூடுதல் நற்பலன்களை தருவர். தன்வந்திரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.


சித்திரை 3,4: பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு பாசத்துடன் நடந்து கொள்வர். நீங்கள் மதிக்கும் பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிநேகிதிகளிடம் கடுமை காட்டாதீர்கள். புதிய விஷங்களை கற்பீர்கள்.


சுவாதி: நெருக்கமானவர்களுடன் பேசும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் புதுத் தொடர்பு ஏற்படும். தைரியமான முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது நல்லது.


விசாகம் 1,2,3: வெளியூர், வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகும். அதிர்ஷ்ட யோகம் கூடிவரும். பணியில் உள்ள நுணுக்கங்களை கற்பதில் ஆர்வம் கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்லுங்கள்.


சந்திராஷ்டமம்: 28.12.2020 காலை 6:00 – 29.12.2020 அதிகாலை 5:48 மணி


சூரியன், சந்திரன், புதன் நல்ல பலனைத் தருவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.


விசாகம் 4: பணியாளர்களுக்கு எதிர்பார்த்ததை விட பாராட்டு கிடைக்கும். நீண்ட நாளாக செய்த முயற்சிகள் வெற்றி அடையும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். நண்பர்களுக்கு உதவுவீர்கள்.


அனுஷம்: கலைஞர்களுக்கு பல வருடங்கள் கழித்து நன்மை நடக்கும். பணி சம்பந்தப்பட்ட விஷயங்களை சவால்களாக கருதுவீர்கள். பிறருக்கு உதவி செய்து நற்பெயர் பெறுவீர்கள். எதிரிகள் மனம் மாறுவார்கள்.


கேட்டை: எடுத்த செயல்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தகுந்த மருத்துவம் செய்து கொள்ளுங்கள். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.


சந்திராஷ்டமம்: 29.12.2020 அதிகாலை 5:49 மணி – 31.12.2020 நாள் முழுவதும்


சந்திரன், ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர். குருவாயூரப்பன் வழிபாடு நலம் தரும்.


மூலம்: உங்களின் திறமைகள் பிறருக்கு தெரியவரும். சாமர்த்தியமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும்.


பூராடம்: சிலர் பழைய இடங்களை விற்று புதிய இடம், வீடு வாங்குவர். பெண்கள் வீட்டுத் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். நண்பர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.


உத்திராடம் 1: புதியவர்கள் அறிமுகமாவர். தாயாரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். எதிர்பார்த்த பணியிட மாற்றம் அமையும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள்.


சுக்கிரன், கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.


உத்திராடம் 2,3,4: புதிய விஷயங்கள் கற்பதில் ஆர்வம் ஏற்படும். யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து இடவோ வேண்டாம். பெண்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் வாரமாக அமையும்.


திருவோணம்: வேலை இல்லாதவர்களுக்கு இனிக்கும் செய்தி கிடைக்கும். பணியாளர்களுக்கு சம்பள உயர்வுடன் புதிய துறையில் வேலை அமையும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.


அவிட்டம் 1,2: விட்டு கொடுத்து சில வேலைகளை முடிப்பீர்கள். விலகியவர்கள் தானாக வரட்டும் என்று காத்திருப்பது நல்லது. வழக்கு தொடுப்பதை தவிர்க்கவும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.


புதன், சூரியன், செவ்வாயால் அளப்பரிய நன்மை கிடைக்கும். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.


அவிட்டம் 3,4: மனச்சோர்வுக்கு இடம் தர வேண்டாம். தாமதங்களைக் கண்டு பயப்படாதீர்கள். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயர சிறிது காலம் ஆகும். சொத்து சேர்க்கை இப்போதைக்கு இல்லை. நண்பர்கள் உதவுவர்.


சதயம்: பெண்களுக்கு நகை, ஆடை சேர்க்கை ஏற்படும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும். பணி சம்பந்தமாக வெளிநாடு பயணம் செல்வீர்கள். புதியவர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்.


பூரட்டாதி 1,2,3: பூர்வ சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு அமையும். உடன்பிறந்தோரால் கூடுதல் நன்மை ஏற்படும். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்குவர். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.


குரு, புதன், சனி அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.


பூரட்டாதி 4: பிறர் மகிழும் செயல்களை செய்வீர்கள். புதிய பிரச்னைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள். காதல் கணிந்து திருமணத்தில் முடியும். ஏமாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.


உத்திரட்டாதி: சுபநிகழ்ச்சிக்கான வாய்ப்புகள் தானாக வந்து சேரும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். இரண்டு மூன்று வருமானங்கள் ஒரே சமயத்தில் வரும். விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும்.


ரேவதி: உடல்நலத்தை வருத்தி உழைக்க வேண்டி வரும். உடன்பிறந்தோருக்கு நன்மை செய்வீர்கள். சிலர் உங்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும்.