நாட்டில் மேலும் நூறிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 17, 2020

நாட்டில் மேலும் நூறிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 157ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 831ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 404 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 12 ஆயிரத்து 210 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 560 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 61 பேர் மரணித்துள்ளனர்.