பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரகாசமாக ஒளிர்ந்த கார்த்திகைப்பூ! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, November 27, 2020

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரகாசமாக ஒளிர்ந்த கார்த்திகைப்பூ!

 


தமிழ் மண்ணுக்காய் ஆகுதியான மாவீரர்களை நினைவுகூரும் நாள் நவம்பர் 27 ஆம் திகதியான இன்றாகும். தாயகத்தில் மாவீரகளை நினைவுகூர , கொரோனாவை காரணம் காட்டி பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாவீரர்களை நினைவுகூரும் முகமாகப் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் கார்த்திகைப் பூ ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது.

எந்தவொரு அமைப்பினதும் பின்புலம் இன்றி தன்னெழுச்சியுடன் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் எடுத்த முயற்சியின் விளைவாகவே இச் சாதனை நிகழ்ந்தேறியுள்ளது.

அத்தோடு 'இனவழிப்புப் புரிந்த சிறீலங்கா அரசை எதிர்கொண்டு விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவுகூருகின்றோம்' என்ற வாசகமும் கார்த்திகைப் பூவின் கீழ் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.