லொஸ்லியாவிற்காக இலங்கையின் சட்டத்தை மாற்றமுடியாது; நாமல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, November 30, 2020

லொஸ்லியாவிற்காக இலங்கையின் சட்டத்தை மாற்றமுடியாது; நாமல்

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரத்திற்கு முன்னர் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் லொஸ்லியா தற்போது இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் விடுதியொன்றில் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார், இன்னும் சில தினங்களில் அவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க இலங்கை வந்துள்ள லொஸ்லியா தனிமைப்படுத்தலுக்குள்ளாகமால் திருகோணமலை செல்வதற்கு அவரது நண்பர்கள் இலங்கையின் சில முக்கிய பிரமுகர்களுடன் பேசியதாக இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்த நிலையில் , தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளன.

அந்த வகையில் லொஸ்லியாவின் நண்பரொருவர் அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் லொஸ்லியா தனிமைப்படுத்தலுக்குள்ளாகமால் திருகோணமலை செல்வதற்கு அனுமதி எடுத்து தருமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.

அதற்கு நாமல் தரப்பு லொஸ்லியாவிற்காக இலங்கையின் சட்டத்தை மாற்றமுடியாதென பதிலளித்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.