பாடசாலைகள் நாளை ஆரம்பம் – மாணவர்களுக்கான அறிவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 22, 2020

பாடசாலைகள் நாளை ஆரம்பம் – மாணவர்களுக்கான அறிவிப்பு

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, ஆறாம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்த நிலையில், சுகாதார விதிமுறைமைகள் பின்பற்றப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் மாணவர் அல்லது பாடசாலை பணிக்குழாமில் எவரேனுக்கும் கொவிட் 19 தொற்றுக்கான நோய் அறிகுறிகள் காணப்பட்டால் பாடசாலைக்கு சமூகமளிக்காமல் இருக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், பாடாசலைக்கு சமூகமளித்த எவரேனுக்கும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக ஏனையவர்களுடன் விலகிச் சென்று தேவையான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அல்லது ஓய்வினைப் பெற வீடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாடசாலைக்கு செல்லும் போதும் வெளியேறும் போது பாடசாலை நுழைவாயிலுக்கு அருகில் நெரிசல் நிலை ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் எனவும் தொற்று நோயியல் பிரிவின் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்து வெளியேறும் போதும் பாடசாலைகளுக்கு உள்நுழையும் போதும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்பதோடு முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்