நெல்லியடி நகரப் பகுதிகளில் உள்ள புதிய சந்தை தொகுதியில் அமைந்துள்ள ஒரு வியாபார ஸ்தாபனத்தில் பால் மாவை கடைக்குள் நின்று வாங்குவோர் போல் பாசாங்கு செய்து தான் கொண்டுவந்த ஹெல்மற் களவாக எடுத்து வைத்துக்கொண்டு வெளியேறும்போது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
கடை உரிமையாளர் அவரை கையும் மெய்யுமாக பிடித்து கடும் எச்சரிக்கையுடன் அவரை தப்ப விட்டுள்ளார். திரும்பவும் தொடர்ச்சியாக நெல்லியடி நகரில் உள்ள சில கடைகளில் இதே பாணியில் மோசடிகளும் நடைபெற்று வருகிறது.
கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பால்மா பக்கற்று திருட்டு முயற்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.