அக்கா மற்றும் அவர் கணவருடன் வசித்து வந்த 17 வயது இளம்பெண் தூக்கில் தொங்கினார் – காரணம் தெரியவில்லையாம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, October 10, 2020

அக்கா மற்றும் அவர் கணவருடன் வசித்து வந்த 17 வயது இளம்பெண் தூக்கில் தொங்கினார் – காரணம் தெரியவில்லையாம்

 இந்தியாவில் அக்கா மற்றும் அவர் கணவருடன் வசித்து வந்த 17 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நீலம் குமாரி (17). மாணவியான இவர் தனது அக்கா சுதா மற்றும் அவர் கணவர் ஆகாஷுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வெகுநேரம் தொலைகாட்சி பார்த்த நீலம் குமாரி பின்னர் தனது அக்கா அறையில் தூங்க சென்றார்.

பின்னர் அந்த அறையில் உஷ்ணம் அதிகமாக உள்ளதாக கூறி வேறு அறைக்கு சென்று தூங்கினார். நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆகாஷ் தூங்கி எழுந்த நிலையில் நீலம் குமாரி அறை அருகில் சென்றார்.

அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் நீலம் குமாரி இருந்தார்.

அவர் நள்ளிரவில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றினார்கள்.


நீலம் கமாரியின் இந்த முடிவுக்கு காரணம் தெரியாத நிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.