கிளிநொச்சியில் புகையிரத்தில் மொதுண்ட இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 20, 2020

கிளிநொச்சியில் புகையிரத்தில் மொதுண்ட இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு!

 கிளிநொச்சியில் புகையிரத்தில் மொதுண்ட இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி புகையிரத்தில் ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர். 

உயிரிழந்தவரின் சடலத்தை புகையிரத ஊழியர்கள்கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

குறித்தசம்பவத்தில் கிளிநொச்சி மலயாளபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்