கோட்டாபய ஜனாதிபதியாக இருக்கும் நிலையிலேயே தமிழர்கள் இப்படியான போராட்டத்தை செய்கிறார்களா? வயிற்றெரிச்சலில் சுமணதேரர் வெளியிட்ட வீடியோ - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 28, 2020

கோட்டாபய ஜனாதிபதியாக இருக்கும் நிலையிலேயே தமிழர்கள் இப்படியான போராட்டத்தை செய்கிறார்களா? வயிற்றெரிச்சலில் சுமணதேரர் வெளியிட்ட வீடியோ

 மட்டக்களப்பில் கதவடைப்பு போராட்டம் நடப்பதை பார்த்து வயிறு எரிந்துள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் நிலையிலேயே தமிழர்கள் இப்படியான போராட்டத்தை செய்கிறார்களா?, இதன் பின்னணி யார் என்பதை பார்க்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் இந்த கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இதைய யார் செய்தது, இதன் பின் யார் பொறுப்பாக இருக்கிறார்கள், இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

எங்கள் நாட்டில் பாதுகாப்பு படைகள் உள்ளன. சரியான சிங்கள பாரம்பரியத்தை பின்பற்றும் ஒரு ஜனாதிபதி இருக்கிறார்கள். அவர் இருக்கும் போதே இப்படி போராட்டம் நடக்கிறதென்றால், அதன் பின்னணியை தேடிப்பார்க்க வேண்டும்.

இங்கே கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இங்கு இராணுவத்தின் குடும்பத்தினர் வருகிறார்கள். இந்த கடைகள் பூட்டப்பட்டுள்ளதால் அவர்கள் பொருட்களை வாங்க எங்கு செல்வார்கள் என்றார்.