ஆந்திராவில் மருமகனின் இறுதிச்சடங்குக்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் மூவர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ராட்சத கிரேன் கீழே விழுந்ததில் 6 பொறியாளர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்களை கையாளும் பணியில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் (எச்எஸ்எல்) ஈடுபட்டுள்ளது.
இதற்காக ராட்சத கிரேன்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இந்நிலையில் 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத 70 டன் எடை மிக்க ராட்சத கிரேனை இயக்கும் பணியில் பொறியாளர்கள், தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்ததில் 6 பொறியாளர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் P Bhaskar Raoஎன்ற பொறியாளரும் ஒருவர், தன்னுடைய மருமகன் இறந்துவிட்டதை எண்ணி துக்கமடைந்த மாமனார் Nagamani தன்னுடைய குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு இறுதிச்சடங்குக்காக காரில் புறப்பட்டுள்ளது.
அவரது இரு மகன்கள், மருமகள்களும் உடன் வந்துள்ளனர், நேற்று கஞ்சிலி என்ற இடத்திற்கு அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த லொறி மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே Nagamani, அவருடைய மருமகள் ஒருவர் மற்றும் கார் ஓட்டுனர் பலியாகினர்.
காயமடைந்த இரு மகன்கள் மற்றும் மற்றொரு மருமகள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த மரணத்தால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளாராம் Nagamaniயின் மகள்