மாலைதீவில் தங்கியிருந்த 287 இலங்கையர்கள் நாடு திரும்பினர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 30, 2020

மாலைதீவில் தங்கியிருந்த 287 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் தங்கியிருந்த 287 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பினர்.

குறித்த நபர்கள் விசேட விமானம் ஒன்றின் மூலம் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்களை தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.