15 வயது மாணவனை வீட்டுக்கு அழைத்து உறவு வைத்த சிங்கள பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 2, 2020

15 வயது மாணவனை வீட்டுக்கு அழைத்து உறவு வைத்த சிங்கள பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


15 வயதான சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 29 வயதான பெண்ணை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மெதிரிகிரிய பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.முகநூல் வழியாக 15 வயது சிறுவனும், 29 வயது பெண்ணும் அறிமுகமாகியிருந்தனர். அந்த பெண் திருமணமாகியிருந்தபோதும், குழந்தைகள் இருக்கவில்லை.

முகநூல் பழக்கம் வலுவடைந்ததும், பாடசாலைக்கென கிளம்பிச் செல்லும் சிறுவன் பல சந்தர்ப்பங்களில் அந்த பெண்ணுடன் சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த 3மாதங்களாக இந்த தொடர்பு நீடித்தது.மாணவனின் வரவு ஒழுங்கில்லாமலிருந்த விடயம் பெற்றோரிற்கு தெரிய வந்த பின்னர், மாணவனை அவதானித்தபோது, திருமணமான பெண்ணுடனான அவரது தொடர்பு தெரியவந்தது.

மாணவனை வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் அத்துமீறலில் அந்த பெண் ஈடுபட்டிருந்தது தெரிய வந்ததும், மெதிரிகிரிய பொலிசாரிடம் முறையிடப்பட்டது.பொலிசார் அந்த பெண்ணை கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, எதிர்வரும் 11ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது