அம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெருமளவு இராணுவ தளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி நேற்று மாலை திடீரென தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இராணுவ சீருடைகள், இராணுவ சீருடைக்கான சின்னங்கள், ரி-56 ரக துப்பாக்கிகள், அதற்கான தோட்டாக்கள், வெடி மருந்துகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதாள குழுவைச் சேர்ந்த ஒருவரது வீட்டிலேயே குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.