கண்டி, தெல்தெனிய பகுதியில் அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
நேற்று (24) இரவு 7.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், பொலிஸார் மற்றும் கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீப்பரவல் காரணமாக எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்