யாழில் வீட்டில் இருந்தவர்களை வாள் காட்டி மிரட்டி பணம் நகை கொள்ளை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 30, 2020

யாழில் வீட்டில் இருந்தவர்களை வாள் காட்டி மிரட்டி பணம் நகை கொள்ளை!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீட்டில் இருந்தவர்களை தாக்கி வாளினை காட்டிஅச்சுறுத்தி நகைகள் திருடப்பட்டுள்ளன.இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு சோளம் தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒனரறிலேயே குறித்ததிருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த வீட்டின் பின்பக்கமாக சென்ற நபர்கள் வீட்டின்
கதவினை உடைக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது சத்தம் கேட்டு வீட்டின் குடும்பஸதர் வெளியில் வந்துள்ளார்.இதன்போது அவரை கம்பியால்தாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்களை வாளினை காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.அத்துடன் வீட்டில்
இருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டில் இருந்தவர்கள் அவலக் குரல் இட்டுள்ளனர்.அயலவர்கள் ஓடி வந்த போதும்அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.