இலங்கை முழுவதுமுள்ள அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபா சலுகை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 30, 2020

இலங்கை முழுவதுமுள்ள அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபா சலுகை!

இலங்கை முழுவதுமுள்ள அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபா சலுகை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.


இதற்கமைய, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நுகர்வுக்கு உட்படுத்திய மின்சார பாவனைக்கே இவ்வாறு சலுகை வழங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 67 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனா வைரஸ் பரம்பல் தீவிரம் அடைந்த நிலையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.