உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 31.07.2020 - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 30, 2020

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன் – 31.07.2020

மேஷம்: உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்பு அதிகரிப்பதால் வருமானம் கூடும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகளில் சிறு தொய்வு ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.


ரிஷபம் : தன்னம்பிக்கையுடன் பொதுநல விஷயத்தில் ஈடுபட்டுப் பாராட்டைப் பெறுவீர்கள். தேவையற்ற அலைச்சல் கூடும். யாரையும் விமர்சித்து பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

மிதுனம் : தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். உத்யோகஸ்தர்கள் கூடுதலாக உழைத்து பதவி உயா்வு பெறுவர். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். கலைஞர்கள் புதுமுயற்சிகளை இப்போதைக்கு ஒத்தி வைப்பது நல்லது.

கடகம்: வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கான முயற்சிகள் நடப்பதால் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்

சிம்மம் : தாழ்வு மனப்பான்மை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவால் கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள். கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

கன்னி: மனதை ஒருமுகப்படுத்தி செயலில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். பொருள் வரவு ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து இருக்கும். அடுத்தவர் கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவி செய்து பாராட்டை பெறுவீர்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

துலாம் : குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். வியாபாரத்தில் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்: அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக நிறைய அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கையிருப்பில் சேமிப்பாக பணம் வைத்துக் கொள்வது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு உழைப்பினால் நன்மை

தனுசு: உறவினர் வழியில் தோன்றிய பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். அலுவலகத்தில் பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி லாபம் அதிகரிக்கும்.

மகரம்: பிள்ளைகளின் செயல்கள் பெருமை தேடித் தரும். வியாபாரிகள் திட்டமிட்டு செயல்பட்டால் வீண் அலைச்சலை தவிர்க்கலாம். பொதுப் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் கொள்வர்.

கும்பம்: இழுபறியில் இருந்த செயல்களை விடாமுயற்சியினால் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனஅமைதி தரும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல்

மீனம்: கலைத்துறையினருக்கு நல்ல பெயர் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி உண்டு. குடும்பத்தினரிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். பெண்கள் பணத்தின் அருமையை உணர்ந்து சேமிப்பை அதிகப்படுத்துவர்.