அமெரிக்காவில் அடுத்து ஜோர்ஜ் ஃபிளொயிட்: மீண்டுமொரு கருப்பின இளைஞன் பொலிசாரால் சுட்டுக்கொலை; பொதுமக்கள் போராட்டம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 14, 2020

அமெரிக்காவில் அடுத்து ஜோர்ஜ் ஃபிளொயிட்: மீண்டுமொரு கருப்பின இளைஞன் பொலிசாரால் சுட்டுக்கொலை; பொதுமக்கள் போராட்டம்

அமெரிக்காவில் கருப்பரினத்தை சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொயிட் கொலையினால் எழுந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள், மீண்டும் ஒரு கருப்பரின இளைஞன் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


ரேஷார்ட் ப்ரூக்ஸ் (27) என்ற இளைஞன், அட்லாண்டாவில் வெள்ளிக்கிழமை இரவு வெண்டியின் டிரைவ்-த்ரூ அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சர்ச்சையையடுத்து, அட்லாண்டா பொலிஸ் பொறுப்பதிகாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

​​டிரைவ்-த்ரூ பாதையைத் தடுத்தபடி, ஒருவர் காரில் தூங்கிக் கொண்டிருப்பதாக அட்லாண்டா பொலிசாருக்கு, உணவகமொன்றிலிருந்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சென்ற பொலிசார், அந்த இளைஞன் நிதானமாக இருக்கிறாரா என நடத்தப்பட்ட சோதனையில், அவர் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொலை தொடர்பாக ஆரம்பத்தில் வெளியான வீடியோவில், ப்ரூக்ஸ் நடைபாதையில் இரண்டு அதிகாரிகளுடன் மல்லுக்கட்டுவது, குத்துவது மற்றும் ஒரு அதிகாரியின் கையிலிருந்த இலத்திரனியல் அதிர்ச்சியளிக்கும் துப்பாக்கியை பிடுங்குவது ஆகியவற்றைக் காட்டுகிறது. அந்த துப்பாக்கியுடன் அவர் ஓடும்போது, மற்ற அதிகாரி ப்ரூக்ஸை தனது துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்.
புதிதாக வெளியிடப்பட்ட கண்காணிப்பு வீடியோ, ப்ரூக்ஸ் வாகன நிறுத்துமிடத்தின் குறுக்கே தப்பி ஓடுவதையும், ஓடும்போது திரும்பி பொலிஸ் அதிகாரியை நோக்கி இலத்திரனியல் அதிர்ச்சியளிக்கும் துப்பாக்கியை நீட்டுவதையும் காண்பிக்கிறது. இது பொலிசாரிடமிருந்து பறிக்கப்பட்ட இலத்திரனியல் அதிர்ச்சியளிக்கும் துப்பாக்கி என அட்லாண்டா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் மிருகத்தனம் மற்றும் சீர்திருத்தங்களிற்கு அழைப்பு விடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மினியாபொலிசில் ஜோர்ஜ் ஃபிளொயிட் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அட்லாண்டாவில் அதிக போராட்டங்கள் நடைபெற்றிருந்தது.

ப்ரூக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அட்லாண்டா உணவகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடத் தொடங்கினர்..

சனிக்கிழமை பிற்பகல் சுமார்  150 பேர் சம்பவ இடத்தில் எதிர்ப்புத் தெரிவித்ததாக மதிப்பிட்டனர்.

இதை தொடர்ந்து அங்கு போராட்டங்கள் தீவிரமடைய தொடங்கியுள்ளன.