கிளிநொச்சி விவேகானந்த நகர் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் கருவறையில் இருந்த வேல், மற்றும் எழுந்தருளும் சுவாமி முருகன், வள்ளி தெய்வானை சிலைகள் என்பன திருடப்பட்டுள்ளது.
நேற்றிரவு (24) ஆலயத்தின் கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டு உள் இறங்கி திருடப்பட்டுள்ளது. சிலைகளுடன் ஆலயத்தின் பயன்பாட்டில் உள்ள பல பொருட்களும் திருடிச் செல்லப்பட்டுள்ளது. சுமார் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் திருப்பட்டுள்ளன. என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலீஸ் தடயவியல் பிரிவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.