வீதியில் சென்றவர்களின் கைபேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை ஜுலை 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 15ம் திகதி அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதியில் பட்டப்பகலில் வீதியில் தனியாக சென்றவர்களின் பெறுமதியான கைபேசிகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பறித்து செல்லப்பட்டது.
இது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய கடந்த ஒருமாத விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் நேற்று (17) கைதாகினர்.
குறித்த நபர்கள் கைபேசிகளை பறித்து செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டினை சிசிடிவி காணெளி காட்சியினை அடிப்படையாக கொண்டு இனங்கண்ட பொலிஸார் பாலமுனை பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய உறவு முறை சகோதரர்களைா தாயின் உதவியுடன் கைது செய்தனர்.