பதுளை, தெமோதரை பகுதியில் தென்னிந்திய நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அந்தப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டனர்.
சவுதம் தோட்ட இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து, சிறிய இடமொன்றில் அலங்காரம் செய்து, பனர் கட்டி, கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடாமல், கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களிற்கு உதவி செய்யும்படி விஜய் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.