சீனாவின் குவாங்சி தன்னாட்சி பிராந்தியத்தின் சுஜோ நகரில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் காயமடைந்ததாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கத்திக் குத்தை மேற்கொண்டவா் 50 வயதான அந்தப் பாடசாலையில் பணிபுரியும் காவலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சந்தேக நபரான காவலாளி தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
காயமடைந்தவர்களில் பாடசாலையின் அதிபரும் மற்றொரு பாதுகாப்பு உத்தியோகத்தரும் உள்ளடங்குகின்றனா்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளில் சிறுவா்கள் பாடசாலையில் இருந்து வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுவதையும் அம்புலன்ஸ்கள் அந்தப் பகுதியில் இருந்து விரைந்து செல்வதையும் காண முடிகிறது.
இதேவேளை, இந்தத் தாக்குதலில் யாருக்கும் உயிா்ச் சேதங்கள் எவையும் இல்லை என பொலிஸாா் அறிவித்துள்ளனா்.