யாழில் பரபரப்பு சம்பவம்: சுமந்திரனின் உருவப்படத்திற்கு செருப்புமாலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 13, 2020

யாழில் பரபரப்பு சம்பவம்: சுமந்திரனின் உருவப்படத்திற்கு செருப்புமாலை!

km

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நல்லூர் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் இந்த உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.

இன்று (13) அதிகாலை முதல் அந்த இடத்தில் உருவப்பொம்மையை அவதானிக்க முடிகிறது.

நேற்று இரவின் பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட பின்னர், யாரோ மர்ம நபர்கள் சுமந்திரனின் உருவப்படத்தை நாட்டி, செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

அரசியல்ரீதியான விவகாரங்கள் வேறு வடிவங்களை பெறுவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல என்பது குறிப்பிடத்தக்கது.