குடி போதையில் துன்புறுத்திய கணவனை அடித்து கொலை செய்த மனைவி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 5, 2020

குடி போதையில் துன்புறுத்திய கணவனை அடித்து கொலை செய்த மனைவி!மதுபோதையில் தினமும் துன்புறுத்திய கணவனை பொல்லால் அடித்து கொலை செய்த, மனைவி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை ஹாலி எல, டெபதேவட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தினமும் மதுபோதையில் வரும் கணவன், மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கொடுமையை பொறுக்க முடியாத கட்டத்தில், கணவனை இன்று காலை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த பின்னர் ஹாலி எல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.