யாழ் இளைஞனின் வாய்க்குள் கை வைத்த பொலிஸ்காரருக்கு நேர்ந்த கதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 21, 2020

யாழ் இளைஞனின் வாய்க்குள் கை வைத்த பொலிஸ்காரருக்கு நேர்ந்த கதி!

பொலிசாரால் விரட்டிப் பிடிக்கப்பட்ட போதை பொருள் வியாபாரி, வாய்க்குள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை மீட்க முயன்ற பொலிஸ் உத்தியோகத்தரின் கை விரல்களை கடித்துள்ளார்.


இந்த சம்பவம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில், போதை பொருள் வியாபாரம் நடைபெறுவதாக, நேற்று (19) இரவு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்தனர்.

அவ்வேளை அங்கிருந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரைக் கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே, பொலிஸார் அவரைத் துரத்திப் பிடித்தனர்.

இதன் போது, அவ்விளைஞன் தனது உடமையில் இருந்த போதைப்பொருள் பக்கெட்டை விழுங்குவதற்காக வாய்க்குள் போட்ட போது, விரைந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், இளைஞனின் வாய்க்குள் கைவிட்டு போதைப்பொருளை மீட்க முயற்சித்துள்ளார்.

இதன்போது அவ்விளைஞனர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் கை விரல்களை கடித்துள்ளார். இருந்த போதிலும் பொலிஸார் விடாது, அவரது வாய்க்குள் இருந்து போதைப்பொருளை மீட்டனர்.

இதையடுத்த, அவ்விளைஞனைப் பொலிஸார் கைதுசெய்தனர்.