ஹட்டன் பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த உந்துருளி ஒன்று பாதுகாப்பு சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹட்டன்-டன்பார் பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது உந்துருளியில் மிக வேகமாக வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது
வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே இந்த விபத்திற்கு காரணம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
குறித்த விபத்து அங்கு பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இவ்வாறு பதிவானது