ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினாங்க அதோடு அந்த 7 பெரும் தெருவில் நடக்கும் போது என் பின்னால் வந்து? கதறும் 17 வயது சிறுமி - Kathiravan - கதிரவன்

Breaking

Sunday, May 17, 2020

ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினாங்க அதோடு அந்த 7 பெரும் தெருவில் நடக்கும் போது என் பின்னால் வந்து? கதறும் 17 வயது சிறுமி

தமிழகத்தில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் 5 இளைஞர்கள் தொடர்ந்து கொடுத்து வந்த பாலியல் தொந்தரவு காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் 10-ஆம் வகுப்பு முடித்த நிலையில், அங்கிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனால் கடன் வழங்குவது தொடர்பாக, கிராமம் கிராமமாகச் சென்று குழுக்களை சந்தித்து வந்துள்ளார். அப்போது தான் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், வேல்சாமி, குகன், உதயகுமார், கருப்பசாமி ஆகிய 5 பேர் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர்.

அதன் பின் அவர்களிடம் நண்பர்கள் முறையில் பேசி வந்த நிலையில், திடீரென்று அந்த 5 பேரும், செல்போனிலிருந்து தனித்தனியாக பாலியல் ரீதியாக எஸ்.எம்.எஸ் அனுப்பி வந்துள்ளனர். இதனால் அந்த எண்களை எல்லாம் பிளாக் செய்துள்ளார்.

இருப்பினும், தெரியாத எண்களில் இருந்து தொடர்ந்து ஆபாச எஸ்.எம்.எஸ்கள் வந்து கொண்டே இருந்ததால், மொபைல் போனை அவர் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார்.

இருப்பினும், அந்த சிறுமி வேலைக்கு செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று அவர்கள் பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 8-ஆம் திகதி அச்சிறுமி வீட்டில் இருந்த போது சரவணன், சிறுமியின் எண்ணுக்கு போன் செய்து வீட்டை விட்டு வெளியே வராவிட்டால், வீட்டோடு கொளுத்திவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளான்.

அதுமட்டுமின்றி, சிறுமியின் வீட்டின் முன்பு சத்தம் போட, பயந்த போன அந்த சிறுமி, மண்ணெண்ணெயை உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்த அந்த சிறுமி பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், மகளிர் குழுக்களுக்குக் கடன் கொடுப்பது தொடர்பா ஒவ்வொரு கிராமாக சென்று, குழுத்தலைவிகளைச் சந்தித்து பேசி வரும்போது தான் அந்த 5 பேரும் அறிமுகமானார்கள்.

ஆரம்பத்துல இயல்பாக பேசிய இவர்கள், தொடர்ந்து, ஒவ்வொருத்தரும் அவரவர் போன் நம்பரில் இருந்து ஆபாசமா மெசேஜ் அனுப்பினார்கள். ஐந்து பேரையும் எச்சரிச்சு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன்.

ஆனாலும், தொடர்ந்து, தெருவில் நடந்துபோகும் போதும் ஆபாசமா பேசினார்கள், கடந்த 8-ஆம் திகதி வீட்டில் நான் மட்டும்தான் தனியா இருந்தேன். சரவணகுமார் எங்கள் வீட்டுவாசலில் வந்து நின்று, செல்போனை எதுக்கு ஆப் பண்ணி வச்ச? ஒழுங்கா ஆன் பண்ணு. நாளைக்குக் காலையில போன் பண்ணுவேன்.

நாங்க கூப்பிடும் இடத்திற்கு வர வேண்டும், இல்லையென்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் கூண்டோடு தீ வைத்து கொளுத்திவிடுவோம் என்று சொல்லி சத்தம் போட்டான். இதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்ததால், அவமானத்தில் நான் மண்ணெண்ணெய ஊற்றி தீயை வைத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

சிறுமியின் தாயார் பத்ரகாளி என்பவர், அந்த ஐந்து பேரும் தப்பா பேசுகிறார்கள் என்று என் மகள் என்னிடம் சொன்னவுடன், நான் அவர்களிடம் பேச வேண்டாம் என்று சொன்னேன், அது போலவே அவள் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாள்.

சம்பவம் நடந்த கடந்த 8-ஆம் திகதி நான் வேலைக்கு சென்றுவிட்டேன், என் மகள் மட்டும் தனியாக இருப்பதை அறிந்து அந்த பையன் இப்படி பேசிவிட்டான், என் மகள் தீ வைத்துவிட்டாள் என்று கூறியுள்ளார்.

முதலில் இது குறித்து பொலிசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஊடகங்களில் பரபரப்பாக பேசிய பின்னரே பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு இளஞ்சிறார் உட்பட 4 பேரை 48 மணி நேரத்தில் கைது செய்விட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.