தினசரி 100,000 கொரோனா பரிசோதனைகள் என்ற இலக்கை, அரசாங்கம் விரைவில் அடையும்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, May 1, 2020

தினசரி 100,000 கொரோனா பரிசோதனைகள் என்ற இலக்கை, அரசாங்கம் விரைவில் அடையும்!பிரிட்டனில் தினசரி 100,000 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் என்ற இலக்கை, அரசாங்கம் விரைவில் அடையும், அல்லது நெருங்கிவரக்கூடும் என சமூகச் செயலாளர் ரொபர்ட் ஜென்ரிக் (Communities Secretary Robert Jenrick) தெரிவித்துள்ளார்.
சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் (Health Secretary Matt Hancock) இது குறித்து தெரிவிக்கையில், நேற்று வியாழக்கிழைமையின் புள்ளிவிபரங்களை நோக்கும் பொழுது,  அரசாங்கம் விரைவில்  இந்த இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இங்கிலாந்து முழுவதும் 81,000 சோதனைகள் நடைபெற்றுள்ளன, எனினும் இதற்கும் அதிகமான பரிசோதனைத் திறன் இருப்பதாக அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்..
பிரிட்டன் இப்போது கொரோனா பரவலின் உச்சத்தை கடந்துவிட்டது என பிரதமர் கூறியதற்கு இது வலுச்சேர்பதாக அமைகிறது என கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இன்னும் என்னிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை, அவை இன்று மாலைவெளியிடப்படும் … ஆனால் நாங்கள் இலக்கை அடைவோம் அல்லது நெருங்கி வருவோம் என்று தெரிகிறது.” என இன்றய பிபிசி காலை நேர நிகழ்ச்சியில் ஜென்ரிக் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலக்கு “ஒரு படிப்படியான மைல்க் கல்லாக” இருப்பதாகவும், தேசிய ரீதியில் வலுவான சோதனை வலையமைப்பிற்கான அடித்தளங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்று வியாழக்கிழமை மாலை பிபிசி ஒன்றின் (told BBC One’s) கேள்வி நேர நிகழ்ச்சியில் அரசாங்கம் தனது இலக்கை “மிக நெருக்கமாக அல்லது சந்திக்க வாய்ப்புள்ளது” என போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் (Transport Secretary Grant Shapps ) கூறிய பின்னர் இன்று இந்தக் கருத்துகள் வெளியாகி உள்ளன.
பிரிட்டனின் மருத்துவமனைகள் மற்றும் பரந்த சமூக அமைப்பில் கோவிட் -19 க்கு நேர்மறையான பரிசோதனையின் பின்னர் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்றய புள்ளிவிபரங்களின்படி 26,771 ஆக உள்ளது, இது முந்தைய நாளில் 674 அதிகரித்துள்ளது