கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கும்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 22, 2020

கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கும்!

புதிய கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம் என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) எச்சரித்துள்ளார்.
எனினும் முறையான வகையில் நிதி கிடைக்குமானால் இவ்வருடத்தின் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி (Vaccinology) ஒன்றை தயாரிக்கலாம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் எனவும் கூறியுள்ள அவர் , கொரோனா வைரசுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி குழுவின் தலைவராகவும்  தான் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.