புத்தாண்டு தொடர்பாக நாட்டு மக்களுக்கு முக்கிய விடயத்தை டுவிட்டரில் அறிவித்துள்ள ஜனாதிபதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 10, 2020

புத்தாண்டு தொடர்பாக நாட்டு மக்களுக்கு முக்கிய விடயத்தை டுவிட்டரில் அறிவித்துள்ள ஜனாதிபதி


நாட்டில் நிலவியுள்ள கொரோனா அச்சம் காரணமாக, சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் கொண்டாடும் படி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், தெரிவிக்கையில், புத்தாண்டிற்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், நாட்டின் இக்கட்டான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, கவனமாவும், பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவது அவசியமென பொது மக்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தாார்.

இந்நிலையில், குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது ன்று புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கொரோனா தொற்றின் காரணமாக நாட்டின் நிலைமைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் தற்போது செயல்பட வேண்டும். இதன்காரணமாக இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது என்றார்