ஆனையிறவு சோதனை மையம் ஊடாக வியாழக்கிழமை யாழ்.திரும்பிய பொதுமகன் ஒருவர் பற்றிய தகவல்களை கரவெட்டி பிரதேச செயலகம் கோரியுள்ளது. படையினரது சோதனை சாவடியில் தனது பெயராக இராசமாணிக்கம் (தேசிய அடையாள அட்டை இல-527452530V , முகவரியாக இல81,vகரவெட்டி வடக்கு) என பதிவு செய்துள்ளார்.
எனினும் குறித்த முகவரியில் அவரை இனங்காண முடியாத நிலையில் கரவெட்டி பிரதேச செயலகம் அவரது தகவல்களை கோரியுள்ளது. தகவல் தெரிந்தோர் கரவெட்டி பிரதேச செயலக தொலைபேசி இலக்கம் 0212263258 இற்கு தகவல் தர கோரப்பட்டுள்ளது.
இன் நபர் ஏன் போலியான முகவரிகை கொடுத்து யாழ்பாணத்திற்கு சென்றுள்ளார் என்று இதுவரை புரியவில்லை என்று படைத்தரப்பு கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் இந்த வேளையில் இவரது நடவடிக்கை பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது