உலக நாடுகளை அச்சுறுத்தி பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களைக் கொன்று குவித்து வருகிறது கொரோனா என்ற வைரஸ்.
இந் நிலையில், பிரான்ஸில் அதிகளவான யாழ்ப்பாணத்து மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு பிரான்ஸில் தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் 93 ஆம் பிராந்தியப் பகுதிகளிலேயே கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதி ஆபத்து நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரான்ஸில் முதியோர் இல்லங்களில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்த சுகாதார அறிக்கையில் உள்ளடக்கப்படாமல் இருந்துள்ளது.
இந் நிலையில், எதிர்க் கட்சியினரும் பல்வேறுபட்ட தரப்பினரும் இது தொடர்பான வெள்ளை அறிக்கை ஒன்று தேவை என்று கூறிய நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக அது பற்றிய செய்திகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஆயிரத்து 414 முதியவர்கள் அவர்களது முதியோர் இல்லங்களிலேயே உயிரிழந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரான்ஸில் 7 ஆயிரம் முதியோர் இல்லங்களில் 7 இலட்சம் முதியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அதில் அதிகளவான முதியோர் இல்லங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.