இந்தியா 3 மண்டலங்களாகப் பிரிகிறது- படிப்படியான ஊரடங்குக்கு ஆயத்தம் எனத் தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 11, 2020

இந்தியா 3 மண்டலங்களாகப் பிரிகிறது- படிப்படியான ஊரடங்குக்கு ஆயத்தம் எனத் தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் நாட்டை 3 மண்டலங்களாகப் பிரித்துப் படிப்படியாக ஊரடங்கை விலக்கிக்கொள்ளப் பிரதமர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு, ஊரடங்கு விலக்கு, பொருளாதாரச் சீரமைப்பு ஆகியவை குறித்து கடந்த வியாழனன்று உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது உயிர்களைக் காப்பதிலும், வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் சமமான கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பின் அடிப்படையில் நாட்டைச் சிவப்பு, மஞ்சள், பச்சை என 3 மண்டலங்களாகப் பிரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் பாதித்த சிவப்பு மண்டலத்தில் ஊரடங்கு தொடரும் என்பதோடு, குறைந்த பாதிப்புள்ள மஞ்சள் மண்டலத்தில் கண்காணிப்புடன் மக்கள் நடமாட்டம், பொருளாதாரச் செயற்பாடுகள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பாதிப்பு இல்லாத பச்சை மண்டலத்தில் முன்னரைப்போல் வழக்கமான செயற்பாடு அனுமதிக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.

நாட்டில் 400 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.