யாழில் 360 பேருக்கு பரிசோதனை செய்துவிட்டு சமூகத்தொற்று இல்லையென கூறலாமா? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 22, 2020

யாழில் 360 பேருக்கு பரிசோதனை செய்துவிட்டு சமூகத்தொற்று இல்லையென கூறலாமா?

6 இலட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 360க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு விட்டு யாழில் சமூகத்தொற்று ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இனைப்பாளர் கலாநிதி த.காண்டீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 இலட்சம் வரையிலான மக்கள் வாழ்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமார் 360 பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அபாய நிலைமை நீங்க முதல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட கூடாது என கோரியிருந்தோம். எனினும் எமது கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் ஒரு ஆபத்தான ஒன்றாகவே கருத கூடியதாக உள்ளது என்றார்