பொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” தான் விழக்கூடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தகம் ஊடாக அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
‘நாட்டின் சில இந்து சைவ ஆலயங்களின் கோபுர கலசங்கள் இடிந்து விட்டதாக செய்திகள் பரப்பப்படுகின்றன.
அப்படி எதுவும் நடைபெறவில்லை. இவை கடும் பொய்கள்.
நாடு இன்று எதிர்நோக்கும் கொரோனா தேசிய நெருக்கடி வேளையில், இத்தகைய பொறுப்பற்ற பொய் செய்திகளை பறிமாறி, நெருக்கடியை கூட்டி விளையாட வேண்டாம்.
இத்தகைய பொய்களை பரப்புவோர் தலைகளில் “கோடை இடி” தான் விழக்கூடும். எச்சரிக்கை!!!“ என அவர் பதிவிட்டுள்ளார்.
குறித்த வதந்தியை பெந்தகொஸ் போன்ற சபையினர் பரப்பியதாக விசாரணையில் தெரியவ்ந்துள்ளது, இதனையடுத்து மனோ இவர்களைத்தான் மறைமுகமாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது