குருநாகலில் உள்ள தனது கடையின் மேல்மாடி அறையில் இருந்து நேற்றையதினம் (15) இளைஞன் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பலியானவர் மட்டக்களப்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிசார் கூறுகின்றனர்.
இதேவேளை ஒரே சமயத்தில் அதே கடையில் பணியாற்றும் பெண் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ள பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.