கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.
அதில் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி குணமடைந்த சீனப் பெண்ணையும், 23 ஆம் திகதி குண்மடைந்து வெளியேறிய சுற்றுலா வழி காட்டியையும் தவிர்த்து தற்போது 95 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவ்வாறு சிகிச்சை பெறும் தொற்றாளர்களில் இருவர் வைத்தியர்கள் என சுகாதார தரப்பு செய்திகள் தெரிவித்தது.
அதில் மேலும் சிலர் சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்கள் எனவும் நம்பகரமாக தெரியவருகின்றது.