கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக, இலங்கையின் பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா 7 மில்லியன் ரூபா நன்கொடையளிப்பதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, அவரது நன்கொடையின் கீழ் கொரோனா நோயாளிகளிற்கு சிகிச்சையளிக்கப்படும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குக்கான 485 வைத்தியசாலை படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவுக்கு 169 படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் சுவாச செயல்பாட்டிற்காக ஆறு வென்டிலேட்டர் உபகரணங்களை வழங்கவுள்ளார்.
இதேவேளை, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேமாஸ் ஹோட்டல் மற்றும் சிட்ரஸ் ஹோட்டல் குழுமம் தங்களது வணிக வலையமைப்புகளிடம்,மூன்று ஹோட்டல்களை கோவிட் 19 கண்காணிப்பு மையங்களாக வாங்குமாறு கோரியுள்ளன.