18 இல் கூட்டமைப்பு, கூட்டணி வேட்பு மனுக்கள்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 14, 2020

18 இல் கூட்டமைப்பு, கூட்டணி வேட்பு மனுக்கள்?


நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்க்கான வேட்பு மனுவை வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகள் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேட்புமனுக்கை இம்மாதம் 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 19 திகதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் அடிப்டையில் நாடாளாவிய ரீதியில் சில கட்சிகளும் சுயேட்சைக்கழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றது.

தெற்கினை பிரதிநிதுத்தவப்படுத்தும் பிரதான கட்சிகலோ வடகிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகலோ இதுவரைக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது வடகிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளோ வேட்பாளர்களை இறுதிசெய்வதில் இழுபறிநிலையிலேயே உள்ளது. குறிப்பாக வேட்பாளர்களை இறுதிசெய்வதில் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளாலே வேட்புமனுத் தாக்கல் செய்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் தான் எதிர்வரும் 18 ஆம் திகதி வடகிழக்கெங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் தெரிவிக்கப்படுகின்றது. அதே போன்று முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் அன்றையதினமே வேட்பு மனுக்கலை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிய வருகின்றது.

மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் 18 ஆம் திகதிலே வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அதே நேரத்தில் மேலும் சில கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் திகதி தொடர்பில் இதுவரை முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது