கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் 16 பேர் தொடர்ந்து கண்காணிப்பில்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, March 1, 2020

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் 16 பேர் தொடர்ந்து கண்காணிப்பில்!

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் 16 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது  ஐந்து பேர் என்.ஐ.ஐ.டியிலும் நான்கு பேர் நீர்கொழும்பு டி.ஜி.ஹெச்.சிலும் மூன்று பேர் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் இரண்டு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் கரப்பிட்டி போதனா வைத்தியசாலையில்  மேலும் ஒருவர் கொழும்பில் உள்ள ரிட்ஜ்வே வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பொதுமக்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் காய்ச்சல், தடிமன் போன்ற நோய் இருப்பவர்களும்  குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகமூடி அணிவது நல்லது என்று அமைச்சு  சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை உலக சுகாதார நிறுவனம் கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் உலகளவில் 53 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 85,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் தற்போது 2,924 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.