சென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் சித்திரவதை செய்து, 3 வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த கொலைகாரனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனியில் வசித்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரின் 10 வயது மகள் இரவு இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதனால் சிறுமி சத்தம் போட்டு உள்ளார். இதை தொடர்ந்து சுரேஷ் சிறுமியை 3 வது மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளார். இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து போலீசார் சுரேஷை கைது செய்து உள்ளனர்.