இறுகின்றது கத்தி: ராஜித உள்ளே - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, February 27, 2020

இறுகின்றது கத்தி: ராஜித உள்ளே

சர்ச்சைக்குரிய வௌ்ளை வான் மனிதக் கடத்தல் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வெள்ளை வான் சாரதிகள் என அறியப்படும் நபர்களின் குரல் பதிவுகள் அவர்களது குரல் மாதிரிகளுடன் ஒத்துள்ளதாக அரச இராசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு பிரதான நீதவானுக்கு இன்று (27) அறிவித்துள்ளார்.

வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேக நபர்களாக சரத்குமார மற்றும் அதுலகுமார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கொள்ளை வழக்கு தொடர்பாக குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இதன் பிரகாரம் சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 3ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு மகர சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் சந்தேக நபர்கள் இருவரும் சர்ச்சைக்குரிய வௌ்ளை வான் ஊடக சந்திப்பில் கலந்துகொள்வதற்கு முன்னர் போலித் தாடியுடன் ராஜித சேனாரத்னவின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட மலிக் விஜேநாயக்கவிடம் 15,000 ரூபா பெற்றுக்கொண்டமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு பிரதம நீதவானுக்கு அறிவித்துள்ளார்.