யாழில் ஒரே வீட்டிட்கு இருமுறை பெற்ரோல் குண்டு தாக்குதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, February 7, 2020

யாழில் ஒரே வீட்டிட்கு இருமுறை பெற்ரோல் குண்டு தாக்குதல்!

கடந்த வருடமும் இதே வீட்டிற்கு சேதம் நடந்தபோதும் போலீசாரிடம் முறைப்பாடு கொடுத்தும் எதுவித தீர்வும் கிடைக்கவில்லை முறைப்பாட்டு துண்டு இணைக்கப்பட்டுள்ளது

இதற்கு போலீசாரின் அசமந்த நிலைமையே காரணம் என கிராமவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்!!!!!.

இது முழுமையான சொத்தை கையகப்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் ஒரு செயல். கனடாவில் வசிக்கும் நபர் இந்த செயலைச் செய்ய குண்டர்களுக்கு பணம் செலுத்தியுள்ளார். முதல் உரை டிசம்பர் 9 2019 இல் செய்யப்பட்டது.

குத்தகைதாரர் வீட்டை காலி செய்ததை தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தது. இந்த கட்டத்தில் குண்டர்கள் இரண்டாவது முறையாக வீட்டை அழித்துள்ளனர். காவல்துறையினருக்கு பல முறை அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எது எவ்வாறு இருப்பினும் இப்போது நடைபெறுகின்ற ஆட்சியில் இது ஒரு மிலேச்சத்தனமான செயலாகவே கருத முடிகின்றது

எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு அத்தோடு இதன் காரணமாக அயலில் இருக்கும் மக்கள் அச்சத்தோடு வாழவேண்டிய நிலைமை காணப்படுகின்றது எனவே இனிவரும் காலங்களில் இப்படியான நிகழ்வு இடம்பெறாமல் இருக்க பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொள்ளுமாறு பிரதேச வாழ் மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்