ஜார்கண்ட் மாநிலம் குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமாகாமல் ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த ராம்லால்-ஷாக்கோரி தம்பதி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகன் இருக்கிறார். மகன் ஜித்தீசும் திருமணம் செய்யாமலே அருணா என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.
இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் திருமணம் செய்யாமல் இருப்பதால் தொண்டு நிறுவனம் ஒன்று தங்களுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தது.
அதன்படி தந்தை, மகன் இருவருக்கும் ஒரே மேடையில், ஒரே நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.