இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர பிணையில் விடுதலை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, February 18, 2020

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர பிணையில் விடுதலை

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கொன்று தொடர்பில் முன்னிலையாகாமை காரணமாக அவருக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது சட்டத்தரணி ஊடாக  முன்பிணை கோரி கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜரான அவருக்கு  நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதாவது  அவரை 7,500 ரூபாய் கொண்ட மேலதிக பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், அப்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் ஸைத் ராட் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பாக அவர் உள்ளிட்ட பலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. .

குறித்த வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பாகவே கொழும்பு பிரதான நீதவான், நேற்று  இராஜாங்க அமைச்சர் ஜயந்தா சமரவீரவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.