இத்தாலியில் இருந்து வருகை தந்த இலங்கையர்கள் இருவர் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவருக்கும் இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.