தமிழ் கட்சிகளிடமிருந்து கிடைக்கும் விமர்சனங்கள் எமக்கான வாழ்த்துக்களே- சிறீகாந்தா - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, February 13, 2020

தமிழ் கட்சிகளிடமிருந்து கிடைக்கும் விமர்சனங்கள் எமக்கான வாழ்த்துக்களே- சிறீகாந்தா

தமிழ் தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டமை குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறீகாந்தா மறுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாமே மாற்றுத் தலைமை என்றும் அதனை மழுங்கடிக்கவே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்திருந்தது.
இந்தக் கருத்தை நிராகரித்துள்ள சிறீகாந்தா எதிர்காலத்தில் முன்னணியின் அரசியல் தானாகவே இல்லாமல் போய்விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் தமிழ் கட்சிகளிடமிருந்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இவ்வாறான விமர்சனங்கள் தமது கூட்டணிக்குக் கிடைத்துள்ள வாழ்த்துக்களாகவே பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் சரியான முடிவினை எடுப்பார்கள் என சிறீகாந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்